fbpx

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..! 1,016 பேர் தேர்ச்சி..! முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவஸ்தா..!

குடிமைப் பணி முதன்மை தேர்வுகளின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மிகக்கடினமான தேர்வுகளில் குடிமைப் பணித் தேர்வு முதன்மையானது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1,016 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகளில் ஆதித்யா ஸ்ரீவஸ்தா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்:
ஆதித்யா ஸ்ரீவஸ்தா (முதலிடம்), அனிமேஷ் பிரதான் (இரண்டாவது), டோனூரு அனன்யா ரெட்டி (மூன்றவது), பி கே சித்தார்த் ராம்குமார் (நான்காவது), ருஹானி (ஐந்தாவது), சிருஷ்டி தபாஸ் (ஆறாவது), அன்மோல் ரத்தோர் (ஏழாவது), ஆஷிஷ் குமார் (எட்டாவது), நௌஷீன் (ஒன்பதாவது), ஐஸ்வர்யம் பிரஜாபதி (பத்தாவது இடம்).

Kathir

Next Post

ஒரு மாதத்திற்கு இலவசம்..!! பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தில் மாற்றம்..!! விவரம் உள்ளே..!!

Tue Apr 16 , 2024
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது குறிப்பிட்ட சேவைக்கான கட்டண முறைகளை மாற்றி அமைத்துள்ளது. இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது பணம் வைத்தல், பணம் எடுத்தல், இருப்பு விசாரணை, மினி அறிக்கை, ஆதார் கார்டு நிதி பரிமாற்றம், ஆதார் பே என பல்வேறு வகையான சேவைகளை மக்களுக்கு எளிய முறையில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைகளுக்கான பரிவர்த்தனை சேவை […]

You May Like