fbpx

டெல்லியில் இருந்து வந்த அவசர அழைப்பு..! நாளை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.

டெல்லியில் இருந்து வந்த அவசர அழைப்பு..! நாளை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் பாஜக-வின் முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

#Bignews : ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு.. இன்று முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு...

Thu Jul 21 , 2022
ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக தற்போது தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதே […]

You May Like