தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
கோவை , பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் , ஈரோடு உள்ளிட்ட பா.ஜ. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் கு ண்டு வீசப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றன.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் , உள்துறை செயலாளர் பணிந்தரரெட்டி, டிஜிபி , சைலேந்திரபாபு , உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அப்போது , சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியார்களிடம் அவர் பேசுகையில் , சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க அனைத்து மத தலைவர்களையும் அழைத்து ஆலோசித்து வருவதாகவும் கூறினர்.