fbpx

Liplock அடித்த அமெரிக்க அதிபரின் மனைவி!…. யாருக்கு தெரியுமா?…. வைரல் வீடியோ!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு அதிபரின் மனைவி ஜில் பைடன் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெிரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி பெரும்பான்மைக்கு வந்தனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தபின், முதல்முறையாக அதிபர் ஜோ பைடன் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்திலுத்திலும், உக்ரைன் ரஷ்யா மோதலின்போதும், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.

உலகம் முழுவதும் பல்வேறு சவால்களை அமெரிக்கா, எதிர்கொண்டிருப்பதாக கூறிய ஜோ பைடன், நமது இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தல் விடுத்தால், நமது நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்றும், சீனாவுடனான போட்டியில் வெல்வது நம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வாழ்த்திவிட்டு தனது உரையை தொடங்கியஅதிபர் பைடன் சபையின் முதலாவது கறுப்பினக் கட்சித் தலைவரும் சபையின் சிறுபான்மைத் தலைவருமான ஹக்கீம் ஜெப்ரிஸையும் அவர் அங்கீகரித்தார்.

முன்னதாக அதிபர் ஜோபைடன் தனது உரையை தொடங்கும் முன்பு அவரது மனைவியான ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஷின் கணவரான டக் எம்ஹாஃப்க்கு உதட்டில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Kokila

Next Post

பிப்ரவரி 14 அன்று பசுவை கட்டி பிடித்து காதலர் தினம் கொண்டாட வேண்டும்...! கலாய்க்கும் நெட்டிசங்கள்...!

Thu Feb 9 , 2023
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 அன்று “பசுவை கண்டுபிடிக்கும் தினமாக” கொண்டாடுமாறு இந்திய விலங்கு நல வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இனிவரும் காலங்களில் காதலர் தினத்தன்று “பசுவை கட்டிபிடிக்கும் தினமாக” கொண்டாட வேண்டும் என மக்களைக் […]

You May Like