fbpx

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சர்ச்சை… வைரலாகும் சம்பவம்…

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை ஹோலி என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர் மர்மநபர்கள். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பூசுகின்றனர். அத்துடன் அவர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர்.

இச்சம்பவம் மார்ச் 20ம் தேதி புதன்கிழமை அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியின் வட்ட அதிகாரி(CO) பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். வீடியோவில் உள்ளவர்களை தேடி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது கொண்டாட்டம் மற்ற மதத்தினரை உதாசீனப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது என்பதை யாரும் உணரவில்லை என்றே தெரிகிறது. பண்டிகைகள் கொண்டாடுவதன் நோக்கமே நம் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

Rupa

Next Post

காதல் ஜோடியை வீடியோ எடுத்து ஆயுதப்படை போலீஸ் மிரட்டல்... தூத்துக்குடியில் நடந்த சம்பவம்...

Thu Mar 28 , 2024
தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாநகர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ், இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் […]

You May Like