fbpx

கொல்கத்தாவை அடுத்து உத்தரபிரதேசத்தில் பயங்கரம்..!! செவிலியரை பலாத்காரம் செய்த மருத்துவர்..!!

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் ஏவிஎம் மருத்துவமனையில் இதே போன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு முதன்மை குற்றவாளியான டாக்டர் ஷாநவாஸ் ஒரு அறைக்குள் காத்திருந்தார். அதே மருத்துவ மனையில் செவிலியராக பணி புரியும் 20 வயது பெண்ணை அங்கு பணிபுரியும் வார்டு பாய் வலுக்கட்டாயமாக இழுத்து மருத்துவர் இருந்த அறைக்குள் தள்ளி பூட்டினார். அறைக்குள் இருந்த மருத்துவர் பெண் செவிலியரை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

மறுநாள் வீடு திரும்பிய அந்த பெண், சம்பவம் குறித்து தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். மருத்துவ மனையில் பெண்ணிற்கு பரிசோதனை செய்தனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல், எஸ்சி-எஸ் டி சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் போலீசார் எஃஐஆர் பதிவு செய்துள்ளனர். பின்னர் டாக்டர் ஷாநவாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மருத்துவர் சம்பவம் நடந்த மருத்துவ மனையில் பத்து ஆண்டுகளாக பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஜம்மு-காஷ்மீர் | பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் CRPF வீரர் பலி..!!

English Summary

Uttar Pradesh Horror: Doctor Ties Up and Rapes 20-Year-Old Nurse on Night Shift After She Was Allegedly Dragged by Colleague and Ward Boy to Room in Moradabad’s AVM Hospital; Accused Arrested

Next Post

பெற்றோர் கவனத்திற்கு..! கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம்... என்சிசி இயக்குநரகம் விளக்கம்..!

Mon Aug 19 , 2024
Fake NCC Camp at Krishnagiri... NCC Directorate Explanation

You May Like