உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரதட்சணை கொடுமையால் கணவன் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பரேலியின் பெஹேரி பகுதியில் உள்ள தாண்டா மொஹல்லாவைச் சேர்ந்தவர் ஷாஹித். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலிலே வரதட்சணை கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுறது. வெள்ளிக்கிழமை மாலை இருவரும் ஏதோ விஷயத்துக்காக சண்டை போட்டுள்ளனர். அப்போது, காய்கறி வெட்டும் கத்தியால் ஷாகித் தனது மனைவியை தாக்கினார். மேலும் மனைவியின் அந்தரங்க உறுப்பை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து வைத்த பிறகும், மகளை கணவர் துன்புறுத்தியதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த பெண் மீது அடிக்கடி சிகரெட்டால் சூடு வைப்பதாகவும், மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் ஷாஹித்தை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது போலீசார் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read more ; இன்னும் தீபாவளி போனஸ் வரவில்லையா? இந்த சட்டம் குறித்து கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!