fbpx

உத்தரப்பிரதேச மகா கும்பமேளா கூட்ட நெரிசல்..!! பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ‘மகா கும்பமேளா’ விளங்குகிறது. பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.

அந்தவகையில், மௌனி அமாவாசையான இன்று, மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராட சங்கமத்தில் கூடுவார்கள். மேலும் இந்த நாளில் சுமார் 10 கோடி மக்கள் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நாளில் கங்கையில் நீராட வரும் பக்தர்களின் பெரும் எண்ணிக்கை சங்கமத்தில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர.

Read More : நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய ரவுடி கருக்கா வினோத்..!! ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆஜரானபோது அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

The death toll in the stampede at the Maha Kumbh Mela has risen to 31, it has been reported.

Chella

Next Post

எந்த நோயுமே வரக்கூடாதா..?அப்ப தினமும் நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூப்பர்ஃபுட்ஸ் இதோ...

Wed Jan 29 , 2025
இன்றைய மோசமான வாழ்க்கை முறைக்கு மத்தியில் பலரும் தங்கள் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே ஆரோக்கியமான உணவுகள் தற்போது முக்கிய அம்சமாக மாறிவிட்டன. இந்த உணவுகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த சூப்பர்ஃபுட்கள் சிறந்த வழியாகும். பழங்கள் முதல் கீரைகள் […]

You May Like