உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.
உத்தராகண்ட் அருகே உத்தரகாசியில் திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில் நேற்று நடந்த பனிச்சரிவில் 41 மலை ஏற்ற வீரர்கள் சிக்கினர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இதனிடையே உயிருடன் மீட்கப்பட்ட 8 பேரில் 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
41 பேர் கொண்ட மலையேறும் குழுவினர் சிகரத்தில் ஏறிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். நேற்று 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் ராமன் என்பவரும் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. இவர் இன்னும் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது. தமிழக வீரர் உள்பட மேலும் 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளர்.