IDBI வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Executive பணிக்கென காலியாகவுள்ள 1,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
* Executive பணிக்கென காலியாக உள்ள 1,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
* விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* 20 வயது பூர்த்தியான 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
* இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.29,000 முதல் ரூ.31,000 ஊதியமாக வழங்கப்படும்.
* தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test, Document Verification, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து நாளைக்குள் (நவம்பர் 16) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால், விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : இன்று ஐப்பசி மாத பௌர்ணமி..!! சிவலிங்கத்திற்கு சாத்தப்படும் அன்னத்தை சாப்பிட்டால் கோடி புண்ணியம்..!!