fbpx

தமிழக போக்குவரத்து துறையில் காலியாகும் பணியிடங்கள்……! காரணம் இதுதான் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

தமிழக போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதுடன், காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்தநிலையில், இது தொடர்பாக உரையாற்றிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் உண்டாவது இயற்கையானது தான் எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன் மிக விரைவில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஆகவே போக்குவரத்து துறையில் இருக்கின்ற காலி பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்பட்டு பணியிடங்கள் அனைத்தும் முழுமை அடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Post

இந்தியன் வங்கி மோசடி வழக்கில் ஊழியர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை ...! உயர் நீதிமன்றம் அதிரடி

Thu Jun 29 , 2023
வங்கி மோசடி வழக்கில் இந்தியன் வங்கியின் ஆயிரம் வங்கி கிளையின் முன்னாள் தலைமை மேலாளர் பி. முத்தையா அதே கிளையின் முன்னாள் ஏஜிஎம் எம். அசிஸ், ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்தின் முன்னாள் இணை மேலாண்மை இயக்குநர் மனோகர் பிரசாத் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்கியில் பணிபுரிந்த முத்தையாவுக்கு ரூ. 70,000-மும், அசிஸ்-க்கு ரூ. 50,000-மும், மனோகர் பிரசாத்துக்கு ரூ. […]

You May Like