மும்பையை தூங்காத நகரம் என்று அழைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே அங்கு இருக்கும் மக்கள் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக, மும்பை மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது தெரு உணவுகள் தான். அங்கு பலரின் விரும்பமான ஸ்நாக்ஸாக வடா பாவ் இருக்கிறது.
வடா பாவ், கடற்கரை நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் கிடைக்கும். இந்த உணவுப் பொருள் மகாராஷ்டிராவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களிலும் பிரபலமாக இருக்கிறது. இதனை சுவைக்கு பலரும் அடிமை என்றே தான் சொல்ல வேண்டும். இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அதாவது மும்பையின் ’வடா பாவ்’ உலகின் சிறந்த சாண்ட்விச்சுகள் பட்டியலில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் ‘உலகின் 50 சிறந்த சாண்ட்விச்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வடா பாவ் 4.3 ரேட்டிங்குடன் பட்டியலில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. வியட்நாமிய பான் மி சாண்ட்விச் மற்றும் துருக்கிய டோம்பிக் டோனர் 4.6 மதிப்பீட்டில் பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.
Read More : TN JOB | தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! ரூ.35,000 வரை சம்பளம்..!!