சென்னையில் வசிக்கும் மக்கள் எல்லாம் தவறாமல் போகும் ஒரு கோயில் எதுவென்றால் அது வடபழனி முருகன் கோயில்தான். பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த வடபழனி ஆண்டவரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது.
கோவில் வரலாறு : 1890-ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோவில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கோவில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவில் அமைத்தார் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனி சன்னதி : இந்த கோவிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தின் மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.
சிறப்புகள் : திருமண வரன் மற்றும் குழந்தை பாக்கியம் அமையாதவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டியதெல்லாம் தரும் இந்த வடபழனி ஆண்டவரின் மிக முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை உள்ளது. இதனைத் தவிர பக்தர்கள் வேல் காணிக்கை அல்லது பணமாகவும் உண்டிலில் செலுத்துகிறார்கள்.
Read more : திமுக-பாஜகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா.. மாமனார் மார்ட்டினுக்கு நெருக்கடி..? – ஆதவ் மனைவி பரபரப்பு அறிக்கை