மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சராக பதவி வகித்த வடிவேல் காலமானார். அவருக்கு வயது (86). திருப்பத்தூர் மாவட்டம் சம்மந்தி குப்பம் கிராமத்தை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் வடிவேலுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.