fbpx

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ..!! உடல்நிலைக்கு என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவுக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு எலும்பு முறிவுக்காக அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது வைகோவுக்கு வலது தோல்பட்டை எலும்பில் பிளேட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், வைகோ அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ”பெயர் கெட்டுவிடும் என அந்த விஷயத்தை மூடி மறைக்காதீங்க”..!! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!

English Summary

The news that Madhyamik General Secretary Vaiko has been admitted to Apollo Hospital in Chennai has created a sensation among the party.

Chella

Next Post

”உனக்கு வேலை ரெடி பண்ணி தர்றேன் வீட்டுக்கு வா”..!! இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த பேராசிரியர்..?

Thu Nov 14 , 2024
The young girl who escaped from him went into the toilet of the house and locked the door.

You May Like