fbpx

இளையராஜா பெயரை எடுத்ததும் மாறிய வைரமுத்து முகம்! உடனே கொடுத்த ரியாக்‌ஷன்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

எம்எஸ்வி-யா, கண்ணதாசனா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ள வைரமுத்து, இளையராஜா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், இன்று கார்ல் மார்க்சின் பிறந்தநாள், மாநாடு நடைபெறும் இந்த ஊரும் பொருள் உடையது. மதுரையில் கோவில் உண்டு, மலை உண்டு, ஆனால் கடல் இல்லை விக்கிரம ராஜா வணிகர்களை ஒருங்கிணைத்து ஒரு கடலை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு முனை வரியை கொண்டு வந்தது உங்கள் அமைப்பு. நுழைவு வரியை நிருத்தியது உங்கள் அமைப்பு. கொரோனா காலத்தில் இந்த வணிகர் சமுதாயம் தமிழர்களின் உயிரை காப்பாற்றியது. தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க மாநாட்டில் வைரமுத்து கோரிக்கை வைத்தால் அதை ஏற்று தமிழில் பெயர் பலகை வைப்போம் என்று வணிகர் சங்கத்தினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில், எம்எஸ்வியா? கண்ணதாசனா? என்ற கேள்விக்கு, உடலா உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில் என்றார்.

எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அதனைத்தொடர்ந்து, இளையராஜா பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் சற்று நேரத்தில் வைரமுத்துவின் முகம் மாறியது. அதனைத்தொடர்ந்து, இளையராஜா விவகாரம் குறித்து என்னிடம் எதுவும் பேசக்கூடாது என வைரமுத்து பதில் கூறினார். இளையராஜா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த வைரமுத்துவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Post

Today Gold Rate : வாரத்தின் முதல் நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ..

Mon May 6 , 2024
நேற்று மே 5 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை […]

You May Like