இஸ்ரோவில் ராக்கெட் விண்ணில் ஏவுப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
இஸ்ரோ ராக்கெட் ஏவுதலின் போது கவுண்ட்டவுன் மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இது முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சின்னமான நிகழ்வு. இந்த கவுண்டவுன் குரல், சோதனையின் நேரடி ஒளிபரப்பைக் காண கோடிக்கணக்கான மக்களை தங்கள் டிவி மற்றும் செல்போன்களைப் பிடிக்கச் செய்தது. ஸ்ரீரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுனில் குரல் எழுப்பிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக பணியாற்றியவர். கடைசியாக கடந்த ஜூலை 30-ம் தேதி PSLV C562 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதற்கான கவுண்டவுன், ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது வரையிலான நிலைகள் பற்றி விரிவாக வர்னணை செய்தார்.
50 வயதை கடந்த இவர், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். வளர்மதி மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இஸ்ரோவின் வெற்றிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் இதை தமிழர்களுக்கான வெற்றியாக நம்மால் சுருக்கிவிட முடியாது. இவர்கள் ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றிக்கும், மனித குலத்தின் வெற்றிக்கும் பங்களித்துள்ளனர். அப்படி இருக்கையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை வர்ணனை செய்வதிலும் தமிழ்நாட்டை செர்ந்த வளர்மதி கோலோச்சி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.