fbpx

Valarmathi | தப்பித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2001 – 2006ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பா.வளர்மதி. பதவி காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக 1.70 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு பா.வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு குறித்து பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல என பா.வளர்மதி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் தொடர்ந்து தினந்தோறும் விசாரிக்கப்படும் என எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு உயர்நீதிமன்ற அமர்வு அறிவித்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English Summary : Ex AIADMK Minister Valarmathi Case

Read More : 1ஆம் தேதி முதல் இனி Gmail வேலை செய்யாது..? பயனர்கள் அதிர்ச்சி..!! கூகுள் நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

’அனைத்து இடங்களும் எங்களுக்குத்தான்’..!! 'உங்களுக்கு இவ்வளவு வெறுப்பா'..? ராகுலை சாடிய Modi..!!

Fri Feb 23 , 2024
உ.பி.யில் அனைத்து இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்க மக்கள் முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி, தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, “உத்தரப்பிரதேசம் மாநிலம் தற்போது முன்னேறி வருகிறது. காங்கிரஸ் குடும்பத்தின் ‘யுவராஜ்’ உத்திரப்பிரதேச இளைஞர்களை போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறுகிறார். தன்னிலையில் இல்லாதவர்கள் உ.பி.யின் இளைஞர்களை அடிமைகள் […]

You May Like