fbpx

காதலர் தின செம ஆஃபர்..!! ஆனா இது சிங்கிள்களுக்கு மட்டும்தான்..!! பிரியாணி இலவசம்..!! எங்கு தெரியுமா?

சமீப காலமாக உலகின் அனைத்து இடங்களிலும் காதலர் தினம் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் காதலர் தினமான இன்று சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில், இது தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில், காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம் என்று உணவகம் ஆறுதல் கூறியுள்ளது. சில்சாரில் உள்ள உணவகம் அனைத்து ஒற்றையர்களுக்கும் பிரியாணியை இலவசமாக வழங்கும். இந்த முயற்சிக்கான நோக்கம் குறித்து உரிமையாளர் சிரஞ்சீவ் கோஸ்வாமி கூறுகையில், “ஆமாம், சிங்கிள்களுக்கு பிரியாணி இலவசம். சிங்கிள்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்கணும்” என்றார்.

மேலும், ஒருவர் தனிமையில் இருக்கிறாரா என்பதை அவர் எப்படிக் கண்டுபிடிப்பார் என்ற கேள்விக்கு, ஒருவர் ஜோடியா அல்லது தனிமையா என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் யாராவது உரிமையாளரை அணுகினால், அவர் அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச உணவு வழங்குவார் என்று கூறினார்.

Chella

Next Post

'அல்லாஹ்' என்ற சொல்லும் 'ஓம்' என்ற சொல்லும் ஒரு இறைவன் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பிய மௌலானா!

Tue Feb 14 , 2023
டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள் […]

You May Like