fbpx

வால்மீகி ஜெயந்தி 2023!… கொள்ளைக்காரனான வால்மீகி, முனிவர் ஆனதெப்படி?… சிறப்பு தொகுப்பு!

வால்மீகி ஜெயந்தி என்பது எல்லா காலத்திலும் மிக முக்கியமான மற்றும் பிரபலமான இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை எழுதிய மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆதி கவி அல்லது சமஸ்கிருத மொழியின் முதல் கவிஞராகப் போற்றப்படும் அவர், நாரத முனிவரைச் சந்தித்து, ‘மாரா’ (இறப்பு) என்ற வார்த்தையை உச்சரித்த பிறகு, ஒரு பெரிய மாற்றத்திற்கு ஆளானார், அது பலமுறை திரும்பத் திரும்ப ‘ராம’ ஆனது, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வார்த்தை. மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றின் பெயர். இந்து சந்திர நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் அஸ்வின் பூர்ணிமா அன்று மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வால்மீகி ஜெயந்தி அக்டோபர் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது.

வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, அந்த முனிவர், “யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். “என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.

“உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக் கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி. ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார்.

நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவே, நாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் ‘மரா’ என்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரும், ‘மரா, மரா’ என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று மாறி ராமநாம ஜபமாகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு ‘வால்மீகி’ என்ற பெயர்.

வால்மீகி என்பதற்குப் புற்றிலிருந்து தோன்றியவர் என்ற பொருள். தவம் கலைந்து புற்றிலிருந்துப் புதுப் பிறவி எடுத்ததால் இந்தப் பெயர் அவருக்குப் பொறுத்தமானது. அதாவது பல வருடங்கள் தவம் செய்து, நாரதரிடம் வேதம் கற்று, மகரிஷி வால்மீகி என்று பெயர் சூட்டப்பட்டார். அவரது புதிய வாழ்க்கை தொடங்கியதும், வால்மீகி தனது துணையின் மரணத்தில் ஒரு பெண் பறவையின் துயரத்தால் தனது முதல் ஸ்லோகத்தை உச்சரித்தார், அவருடைய எழுத்துப் பயணம் தொடங்கியது. இருப்பினும், பிரம்மதேவன் அவரை ராமாயணத்தை எழுதும்படி பணித்த பிறகுதான் அவரது வாழ்க்கையின் உண்மையான நோக்கம் தொடங்கியது.

வால்மீகி முனிவர் ராமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த மகான். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு சிலகாலம் கழித்து அன்னை சீதா தேவியை ஸ்ரீராமர் பிரிய நேரிட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த தேவி சீதைக்குத் தன் ஆஸ்ரமத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்தவர் வால்மீகி முனிவர். புண்ணிய கதையான ராமனின் கதையை அப்போதுதான் அவர் எழுதினார். அதைத் தன் மாணவர்களுக்கும் லவன் – குசன் ஆகிய ராமரின் பிள்ளைகளுக்கும் போதித்தார். இந்த நன்னாளில் நம் இருப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து, ஆசீர்வதிக்கப்பட்ட நாளைய நற்செயல்களைச் செய்வோம் என்று உறுதியேற்போம்.

Kokila

Next Post

வேலை வாய்ப்பு இல்லாத நபர்களுக்கு... இன்று காலை 9 மணி முதல்...! மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Sat Oct 28 , 2023
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில […]

You May Like