குஜராத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வண்டி காளைமாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் முன்பக்கம் தகர்ந்தது.
குஜராத்தின் காந்திநகர் மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இணைக்கும் 3-வது வந்தேபாரத் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் காலை 11 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாடுகள் குறுக்கே வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ரயிலின் முன்பக்கம் தகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பழுது ஏற்பட்ட ரயில் எஞ்சினை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப்பில் தயாராகின்றது. புது டில்லி –வாரணாசி , டெல்லி ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி காத்ரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றது.