fbpx

பஸ் டிக்கெட்டை விட விலை கம்மி – வந்தே பாரத் ரயில் டிக்கெட்..!

தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து நெல்லை வரை புதிய ரூட்டில் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வரிசையாக ஒவ்வொரு புதிய ரூட்டிலும் வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் இந்தியாவிலேயே மிக வேகமாகச் செல்லக்கூடிய ரயிலாக இருக்கிறது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதில் மூன்றாவது ரயிலாகச் சென்னையிலிருந்து மதுரை வழியாக நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சென்னை ஐசிஎப் ல் ஒவ்வொரு ரயில் பெட்டிகளாகத் தயாராகி வெளியாகும் போது இந்திய ரயில்வே அதை ஒவ்வொரு டிவிஷனிற்கும் பிரித்துக் கொடுத்து விடும். இப்படியாக அடுத்து ஐசிஎப் வழங்க உள்ள ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வேக்கு ஒதுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த ரயிலைத் தமிழகத்தில் அதிகமாக வருமானம் ஈட்டி வரும் சென்னை நெல்லை ரூட்டில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால் தற்போது இந்த ரூட்டில் தண்டவாளங்கள் பாலங்கள் சிறிய சிறிய பாலங்கள் உள்ளிட்டவற்றில் ரயில் வேகமாகச் செல்லும்போது ஏதும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க செக் செய்யும் பணி நடந்து வருகிறது.

தற்போது நமக்குக் கிடைத்த தகவலின் படி திருநெல்வேலியிலிருந்து அதிகாலையில் கிளம்பும் இந்த வந்தே வாரத்தில் மதியத்திற்குள் சென்னைக்கு வந்து சேரவும், மதியம் சென்னையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் இரவு திருநெல்வேலிக்கு வந்து சேரவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான நேரம் மற்றும் பயண நேரம் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் திண்டுக்கல்-மதுரை-நெல்லை இடையே உள்ள ரயில் பாதையை 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் அளவிற்குப் பலப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் துரிதமாக நடந்து வரும் அதே பணியால் ஆகஸ்ட் மாதம் இந்த ரயில் செயல்பாட்டிற்கு வந்து விடும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த ரயிலுக்கான டிக்கெட் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வமான டிக்கெட் விலை இல்லை என்றாலும் இந்த விலையில் தான் டிக்கெட் விற்பனைக்கு வரும் எனப் பேசப்படுகிறது. அதன்படி சென்னை – நெல்லை இடையே பயணிக்க மொத்தம் வந்தே பாரத் ரயிலில் இரண்டு விதமான பெட்டிகள் இருக்கும் எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் எகானமி சேர் கார். இதில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ.3000 வரை டிக்கெட் இருக்கலாம் என்றும் எகானமி சேர் காரில் ரூ1400 முதல் ரூ 1500 வரை டிக்கெட் விலை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த டிக்கெட் விலையில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நெல்லையில் வந்தே பாரத் ரயிலைப் பராமரிக்கத் தனியாக பிட் லைன் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் வந்தே பாரத் ரயிலைச் சுத்தப்படுத்துவது முதல் அதற்கு நீர் ஏற்றுவது உள்ளிட்ட அனைத்து விதமான பராமரிப்பு பணிகளும் செய்யப்படும் என கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் ரூபாய் 1400 என வெளியாகி உள்ள செய்திக்குப் பின்பு தனியா பஸ் டிரைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னைக்கு வர பல தனியார் பஸ்கள் ரூபாய் 2000 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். பல சிறப்பு வசதிகளுடன் வந்தே பாரத் திரையில் அதைவிடக் குறைவான கட்டணத்தில் வருவதால் தனியார் பஸ் ஓனர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

Maha

Next Post

பள்ளி கழிவறையில் பயங்கரம்..!! 7 வயது சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்..!!

Sat Jul 1 , 2023
7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஜூன் 26ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுமியை அங்கு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் […]

You May Like