வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

இந்நிலையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.. மேலும் வாணி ஜெயராம் கீழே விழுந்து தலையில் அடிபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்றும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.