fbpx

மாதம் பல லட்சம் வருமானம் ஈட்டும் வனிதா விஜயகுமார்..!! அப்படி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..?

திரையுலகில் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர், சில பிரச்சனைகள் காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. அண்மையில் கூட அவருடைய போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளிவந்திருந்தது.

நடிகை வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் மட்டுமின்றி வேறொரு தொழிலும் செய்து வருகிறாராம். ஆம், சொந்தமாக துணிக்கடை ஒன்றை வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறார். விவி ஸ்டைலிங் என்ற பெயரில் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் துணிகள் மட்டுமின்றி மேக்கப் பொருட்களும் கிடைக்கிறது என கூறப்படுகிறது. இந்த கடையில் விற்கப்படும் அனைத்து ஆடைகளும் வனிதா வடிவமைத்த ஆடைகள் தானாம்.

வனிதா விஜயகுமார் பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்து முடித்துள்ளாராம். மேலும் பி. வாசு இயக்கிய சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தனக்கு சொந்தமான விவி ஸ்டைலிங் கடையின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பல லட்சங்களில் வருமானம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதி.! தடை கற்களை தவிடு பொடியாக்கிய ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுக்கள்.!

Tue Feb 13 , 2024
ஸ்ரீபதி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியின பிரிவை சார்ந்த பெண். இவர் தனது நீதிபதி கனவை மெய்ப்பித்திருக்கிறார். பழங்குடியின சமூகத்தில் வந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். விரைவில் ஆறு மாத நீதிபதி பயிற்சிக்கும் செல்லவிருக்கிறார். திருவண்ணாமலையில் இருக்கும் ஜவ்வாது மலையை அடுத்து இருக்கும் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. இவர் கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வை […]

You May Like