சென்னை வண்ணாரப்பேட்டையில் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் , இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேருக்கு தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம்
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷகிதா பானு இவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உறவினர் பெண்ணான 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஷகீதா பானு, ஆய்வாளர் புகழேந்தி உள்பட 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை போக்சோசிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் ஆய்வாளர் , ஷகீதா பானு உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்தது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே நீதிமன்றம் கூறிய நிலையில் இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ராஜலட்சுமி தண்டனையை அறிவித்தார்.
சிறுமியின் உறவினர்கள் ஆறு பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களின் பெயர்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது என்பதால் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. மற்ற 13 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதில் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி , உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி , பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.