fbpx

உடலுறவுக்கு மறுத்ததால் பழங்குடியின பெண்ணின் உரிமைத்தொகையை நிறுத்தி வைத்த விஏஓ..!! விழுப்புரத்தில் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட நல்லாபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் சங்கீதா என்ற இளம்பெண். இவர், பழங்குடி இனமான இருளர் இனத்தை சேர்ந்தவர். இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர்களுக்கு 11 வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளார். இந்த பெண் தனது கணவர் இறந்ததால் சான்றிதழ் வாங்குவதற்காக விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு விஏஓ ஆரோக்கியதாஸ் என்பவரிடம் மனு அளித்தபோது, இறப்பு சான்றுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தன்னிடம் ரூ.1,000 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணத்தை வாங்கிக்கொண்ட அவர் சங்கீதாவுக்கு தினமும் இரவுநேரத்தில் போன் செய்து, ஆபாசமாக பேசியிருக்கிறார். லஞ்ச பணம் தராததால்தான், இப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்று நினைத்து, மேலும் 3,000 ரூபாயை அந்த பெண் கொடுத்துள்ளார்.

பிறகு தான் சான்றிதழை கொடுத்துள்ளார். அதன்பின்னர், மகளிர் உதவித்தொகைக்காக சங்கீதா விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவரது விண்ணப்பத்தை பார்த்ததுமே, விஏஓ ஆரோக்கியதாஸ், ரத்து செய்துள்ளார். மேலும், அவர் தன்னுடன் பாலியல் இச்சைக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, தன்னுடைய உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோருடன் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கீதா புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, விஏஓ ஆரோக்கியதாஸை சஸ்பெண்ட் செய்தும் கோட்டாட்சியர் காஜாசாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

"குடிச்சி வாழ்க்கையை கெடுத்துக்காதப்பா…"! தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! பதபதைக்க வைக்கும் பின்னணி.!

Sat Nov 25 , 2023
கடலூர் மாவட்டத்தில் சாராயம் குடிக்க பணம் கொடுக்காததால் தாய்யை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர்களது மகன் சேவாக்(21) சென்னை மற்றும் திருப்பூரில் கூலி வேலை செய்து […]

You May Like