இங்கிலாந்தில் 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் இளம்பெண் ஒருவர் அரியவகை நோயால் பாதிகப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் எல்லே ஆடம்ஸ் என்ற 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். வசிக்கும் 30 வயது பெண் எல்லே ஆடம்ஸ். இவர் எந்த வித உடல்நலக்குறைவும் இல்லாமல் 2020 அக்டோபர் வரை சிறப்பாக வாழ்ந்துவந்துள்ளார். 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திடீரென ஒருநாள் தூங்கி எழுந்து காலையில் சிறுநீர் கழிக்கச்சென்றுள்ளார். அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. இதையடுத்து, நீர் ஆகாரங்களான பானங்களை அருந்தியுள்ளார். இருப்பினும் சிறுநீர் வெளியேறாததால் பதற்றமடைந்த ஆடம்ஸ், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பொதுவாக சிறுநீர்ப்பை என்றால், பெண்களில் 500 மிலி, ஆண்களுக்கு 700 மிலி சிறுநீர் தான் இருக்கும். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் அளவிற்கு சிறுநீர் தேங்கியிருப்பதாக தெரிவித்து, பின்னர் டியூப் மூலம் செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர்.
இதையடுத்து தற்போது வரை ஒவ்வொரு முறையும் ஆடம்ஸ், டியூப் மூலம் செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றி வருகிறார்.இப்படியே ஓராண்டு கழிந்த நிலையில், 14 மாதங்களுக்குப் பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு Fowler’s syndrome என்ற அரிய வகை நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய நோய் கொண்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது, குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த அரிய நோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வரும் ஆடம்ஸுக்கு catheter என்ற சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றி வரும் இவர் Sacral Nerve Stimulation என்ற சிகிச்சையை பெற்று வருகிறார். இருப்பினும் ஆரம்ப காலத்தை விட சிகிச்சைக்குப் பின் தற்போது பரவாயில்லை என்று இளம் பெண் எல்லே மனம் தளராமல் நம்பிக்கை கொண்டுள்ளார்.