fbpx

காற்றின் வேக மாறுபாடு!… இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆக.8, 9-ல் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமான இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். ஆக.9 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!… முதற்கட்டமாக ஆகஸ்ட் 12ம் தேதிவரை தடுப்பூசி போடப்படும்!

Tue Aug 8 , 2023
குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் திட்டத்தை கடந்த 2014 டிசம்பரில் அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள்காமாலை, நிமோனியா […]

You May Like