fbpx

வாரிசு, துணிவு படங்களை வெளியிட தடை..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படமும், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் இரு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வாரிசு, துணிவு படங்களை வெளியிட தடை..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

இந்த உயர்நீதிமன்ற மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறினார். மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.சரவணன், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

மனைவியுடன் ’வாரிசு’ படம் பார்க்க வந்த விஜய்..!! படக்குழுவினர் மீது கோபமடைந்ததால் பரபரப்பு..!!

Tue Jan 10 , 2023
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் படக்குழுவினரிடம் கோபமடைந்தார் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் […]
மனைவியுடன் ’வாரிசு’ படம் பார்க்க வந்த விஜய்..!! படக்குழுவினர் மீது கோபமடைந்ததால் பரபரப்பு..!!

You May Like