fbpx

ELECTION 2024| ‘5’ மாநிலங்களில் களம் இறங்கும் விசிக.! தனிச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு.!

தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்தக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக தொல் திருமாவளவன் இருந்து வருகிறார். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்று இருக்கிறது. இது தொடர்பாக தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் குழு உடன் விசிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் 4 தொகுதிகளில் களம் இறங்க வாய்ப்பு கேட்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். 3 தனித் தொகுதிகள் 1 பொது தொகுதி என 4 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்புவதாக திமுக தேர்தல் குழுவிடம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய பின் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட இருப்பதாக திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர் வரும் பொது தேர்தலில் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா கேரளா மற்றும் தெலுங்கானா என 5 மாநிலங்களில் விசிக போட்டியிடும் என தெரிவித்திருக்கிறார். மேலும் தங்களது கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English Summary: VCK decided to contest from 5 states in the upcoming parliament election and submit a petition to election commission for unique election symbol.

Next Post

'பாய்ந்தது வழக்கு' .. நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.! காவல்துறை நடவடிக்கை.!

Tue Feb 20 , 2024
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தனது அரசியல் கட்சி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும் இவரது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டது. மேலும் கட்சியின் பெயர் தொடர்பான சர்ச்சைக்கும் சில தினங்களுக்கு முன்பு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு […]

You May Like