நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றிவர் வீரப்பன் மகள் வித்யா ராணி. இதையடுத்து, மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து கொண்டார். அங்கு அவருக்கு மாநில ஒபிசி துணை தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக பொட்டியிட்டார்.
அப்போது நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், “வீரப்பன் காட்டை ஆண்டார், அவரது மகள் வித்யா நாட்டை ஆளப்போகிறார்” என்றெல்லாம் புகழாரம் சூட்டினார் சீமான். ஆனால், அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்த வித்யா ராணிக்கு, தற்போது இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலத்தை சேர்ந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள்” என்று சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல், பதவிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் என்பவரையும் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமித்து சீமான் அறிவித்துள்ளார்.
Read More : ’எங்க தலைவரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க’..!! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த என்.ஆனந்த்..!!