fbpx

வீட்டு உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்….. கொலைக்கான பின்னணி……

கர்நாடகாவில் வீட்டு உரிமையாளரை கழுத்தை நெறித்து கொலை செய்த இளம்பெண்ணின் பின்னணியை தற்போது பார்க்கலாம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெங்கேரி பகுதியில் வசித்து வருபவர் குருமூர்த்தி. இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. சலூன் கடை நடத்தி வரும் குருமூர்த்தியின் மனைவி கடந்த 10ம் தேதி  வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.

இதில், குருமூர்த்தி தனது வீட்டின் மேல் தளத்தில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மோனிகா என்பவரை வாடகைக்கு வைத்துள்ளார். இவர், ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை  தன்னுடைய கணவர் என மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

அவருடைய காதலன் எப்போதுவது வீட்டிற்கு வந்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்த நிலையில், தன்னுடைய காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார். இதனால், மோனிகாவின் காதலன் பலரிடம் கடன் வாங்கி செலவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடன் சுமையால் காதலன் கஷ்டப்படுவதை கண்ட மோனிகாவிற்கு   என்ன செய்வதெனத் தெரியவில்லை. 

அதே நேரத்தில் காதலனுக்கு சரக்கு ஆட்டோ ஒன்று வாங்கிக் கொடுக்கவும் மோனிகா திட்டமிட்டார்.  வீட்டின் உரிமையாளர் ஆன குருமூர்த்தியின் மனைவி திவ்யா தங்க நகைகள் அணிந்திருப்பது மோனிகாவிற்கு உருத்தியுள்ளது. அதனை கொள்ளையடிக்க திட்டமிட்ட மோனிகா, கடந்த 10ம் தேதி திவ்யாவிடம்  சென்று பேசுவது போல் நடித்து கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டார். 

அவரிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பேரில் இளம்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மோனிகாவை கைது செய்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பை நார்த்திசுக் கட்டிகளால் பாதிக்கப்பட்ட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

shyamala

Next Post

"கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலைமை இதுதான்" சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா.. ரியாக்‌ஷன் கொடுத்த மோடி!

Fri May 17 , 2024
கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த […]

You May Like