தனியார் பள்ளி மாணவிகள் மர்ம மரணம்..! விசாரிக்க தனி ஆணையம்..! வெளியான பரபரப்பு அறிக்கை..!

தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளி மாணவிகள் மர்ம மரணம்..! விசாரிக்க தனி ஆணையம்..! வெளியான பரபரப்பு அறிக்கை..!

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

அவுட் ஆஃப் பார்மில் விராட் கோலி..! இதுவும் கடந்து போகுமென தட்டிக்கொடுக்கும் பாகிஸ்தான் கேப்டன்..!

Fri Jul 15 , 2022
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. அந்தளவுக்கு தனது அபார பேட்டிங்கால் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து தந்துள்ளார். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பரவாயில்லை, கோலி நிலைத்து நின்றால் வெற்றி இந்திய அணிக்கு என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது..! இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை எப்போது?

You May Like