சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் ஒரு வாரத்திற்கு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில், பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் இதுபோன்ற பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்தில் இத்தகைய மாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் நிபுணர் குழுக்கள் இணைந்து புதிய போக்குவரத்து மாற்றத்தை ஏற்பாடு செய்துள்ளது. இப்போக்குவரத்து மாற்றத்தில். கோயம்பேட்டில் இருந்து கே.கே.நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் வலதுபுறம் தடை செய்யப்பட்டுள்ளது.
அசோக் பில்லர் முதல் லக்ஷ்மண ஸ்ருதி வரை யு-டர்ன் தடைசெய்யப்பட்டுள்ளது; அதற்கு பதிலாக அவர்கள் வழங்கப்பட்ட புதிய U-டர்ன் பயன்படுத்த முடியும். அதற்கு பதிலாக, அவர்கள் 100 மீட்டருக்கு முன்னால் புதிதாக ஏற்ப்படுத்தப்பட்ட U-திருப்பத்தை பயன்படுத்தி, மேலும் PT ராஜன் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். அசோக் பில்லர் மற்றும் கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் யூ- டர்ன் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வழங்கப்பட்ட புதிய U-டர்ன் பயன்படுத்த முடியும்.
இந்த நவீன மாற்றுப்பாதையின் நோக்கம் போக்குவரத்து நெரிசலை கூர்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக உள்ளது. மேற்கூறிய மாற்றுப்பாதை இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு தொடரும்.