fbpx

வேளச்சேரி பள்ளம்..!! 4 நாட்களுக்கு பிறகு இருவரில் ஒருவரின் உடல் மீட்பு..!!

சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவைகளை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென 50 அடி பள்ளம் ஏற்பட்டதால், அந்த பள்ளத்தில் அடுக்குமாடி கட்டிடமானது, தரையில் இறங்கிவிட்டது.

கண்டெய்னர் சரிந்து விழுந்துவிட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக சொல்கிறார்கள். 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பார்ட்மென்ட் கட்டுவதற்காக இந்த கட்டுமான வேலை நடந்ததாக சொல்கிறார்கள். இதற்காகவே இந்த 50 அடி பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது.. இந்த பள்ளத்தின் பக்கத்திலேயே, ஊழியர் சரக்கு பெட்டகத்தில் செய்யப்பட்ட தற்காலிக அறையானது, திடீரென சரிந்து 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இதில் சிக்கிய 8 பேரில் 6 பேர், சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 2 பேரை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் படையினர் பள்ளத்தில் விழுந்த ஊழியர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். என்.எல்.சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்களும் இந்த மீட்பு பணியில் பங்கு கொண்டன. அப்போது, இந்த பள்ளத்தில் மண் சரிவும் ஏற்பட்டதால், நிவாரண பணியில் சிக்கல்கள் ஏற்பட்டன.

நேற்று 4-வது நாளாக அவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது. கிட்டத்தட்ட 85 மணி நேரத்துக்கும் மேலாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாத நிலையில், அவர்களின் உடல் நிலை குறித்த கவலையும் பதற்றமும் எழுந்தவாறே இருந்தது. மண்ணுக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள் உணவு, குடிநீரின்றி சமாளிக்க முடியுமா? சுவாசிப்பதற்கு வழியுள்ளதா? என்ற கலக்கங்கள் சூழ்ந்தவாறே இருந்தன. எனினும், நேற்றிரவுக்குள் பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், இன்று விடிகாலை ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

பள்ளத்தில் விழுந்த 5-வது நாளில், உடல் மீட்கப்பட்டுள்ளது. பம்பிங் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், அந்த பணிகள் முடிந்த நிலையில், இன்று விடிகாலை ஒருவரின் உடலை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறையினர் கண்டெடுத்தனர். அதிகாலை 3.30 மணிக்கு மீட்கப்பட்ட அவரது உடல், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளத்தில் விழுந்த மற்றொருவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

அநேகமாக இன்று மதியத்திற்குள் மற்றொருவரின் உடலும் மீட்கப்பட்டுவிடும் என தெரிகிறது. இதனால், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் பெயர் நரேஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Fri Dec 8 , 2023
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், படாளம் […]

You May Like