fbpx

வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் … கண்டிஷன் போட்ட ஐசரி கணேஷ் …

வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , ஒளிப்பதிவாளர் , சித்தார்த்தா, படத்தொகுப்பாளர், ஆண்டனி , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவுதம் பேனன் பேசும்போது ’’ திரைப்படம் வெற்றி பெற்றதற்கு நன்றி கூறத்தான் வந்தேன் ஆனால் … ஏதாவது பேசுவோமா என நினைக்கின்றேன். ஆனால் , நான் ஏதாவது கூறப்போய், தவறாக புரிந்துகொள்ளப்படுமோ என கவலை அளிக்கின்றது. படம் வெளியாகும் முன் தூங்கிவிட்டு வாருங்கள் என கூறினேன். அதை அடிகோடிட்டு பெரிய செய்தியாக்கிவிட்டார்கள். நான் ஃபிளைட்டில் செல்கின்றேன் என்றால் என் அம்மா நன்றாக தூங்கிவிட்டு போகச் சொல்வார்கள். ஃபிளைட்டில் கூட தூ்க முடியும். புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால் அப்படி கூறுவார்கள். அந்த மாதிரிதான் நான் கூறினேன். இவ்வளவு பெரிய பேசுபொருளாகும் என நினைக்கவில்லை. அதுதான் படத்தை பெரிதாக சென்று சேர்த்துள்ளது. நேர்மறையாக ரெவியூ கொடுத்தவர்களுக்கும் நன்றி அதில் சொல்லப்படும் குறையை என் குழு குறித்து வைக்கின்றார்கள் . தவறுகளை சரி செய்ய உதவும்.

சில நேரங்களில் விமர்சனம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும் எந்தப் படத்திற்கும் விமர்சனம் பார்த்துவிட்டு நான் செல்ல மாட்டேன். என் பார்வையை மாற்றும் படி சில கருத்துக்கள் அதில் இருக்கும். ஒருவரின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் விசயம் என கூட தோன்றும். நேரடியாக அது பாதிப்பை ஏற்ழுடுத்தும் என நான் நினைக்கின்றேன். அத சில நேரங்களில் நடக்கும், சில நேரங்களில் நடக்காது ஆனால் விமசர்னம் செய்வது அவர்களின் வேலை எனவே இதை பற்றி நான் இப்போதெல்லாம் யோசிப்பதில்லை. ’’ என்றார்.

மேலும் ’’ படத்தை தொடங்கும் போது நிறைய கஷ்டங்கள் வரும் போகும். முதலில் ஒரு கதையை முடிவு செய்து கதையை மாற்றி நடிகர்கள் , தயாரிபபாளர்ளிடம் சொல்லி சம்மதிக்க வைத்து அவர்களின் ஒத்துழைப்போடு படத்தை எடுத்து முடிக்க வேண்டும் படம் வெளியான பின்னர் மக்களிடம் இந்த அளவு வெற்றி பெற காரணம் நீங்கள் இந்தப் படத்தை பற்றி எழுதியது தான். என்றார்.

இது குறித்து ஐசரி கணேஷ் பேசுகையில் படத்தின் பெயர் வெந்து தணிந்தது காடு … என கூறிய போது என்ன எதிர்மறையான பெயராக உள்ளது என சிலர் சொன்னார்கள். ஆனால் இது போன்ற சென்டிமென்டை நான் நம்பவில்லை. இப்போது படம் பெரிய ஹிட்டாகி உள்ளது. படம் நன்றாக இருந்தால் ஓடும். வெந்து தணிந்தது காடு – பாகம் 2 பற்றி கேட்கின்றார்கள்.  கண்டிப்பா பாகம் 2 எடுக்கப்படும்அதன் ஆயத்தப்பணிகளில் கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் ஜெயமோகன் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒரே ஒரு கண்டிஷன் உண்டு கமர்ஷியல் எலமென்ட்ஸ் எல்லாம் சேர்த்து வேறு மாதிரி கதை எழுதினால் தான் எடுப்பேன்.என்றார்.

Next Post

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா … ஜோ பைடன் அறிவிப்பு ….

Mon Sep 19 , 2022
பெருந்தொற்று நோயானா கொரோனா அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. லட்சக்கணக்கானோர் இதில் உயிரிழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளது . இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் ’’ அமெரிக்காவில் […]

You May Like