’’வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததை அடுத்து நாளை படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர் . ரகுமான் இசையில் நாளை வெளியாக உள்ள படம் வெந்து தணிந்தது காடு… இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க… ’’சூப்பர் ஸ்டார் ’’ என்ற படத்தை தயாரிக்க இருந்ததாகவும் அதற்கான ஒப்பந்தம் கவுதம் வாசுதேவ் மேனனுடன் போட்டுள்ளதாகவும் இதற்காக முன்பணம் ரூ.2 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதே கதையை வைத்து ’’ வெந்து தணிந்தது காடு ’’ என்ற பெயரில் வெளியிட உள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன். எனவே பணத்தை திரும்பத் தரும் வரை இந்த படத்தை வெளியிடக் கூடாது ’’ என தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில் குமார் , ராம் மூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த போது மனு தாரர் தரப்பில் ஒப்பந்தத்தை மீறி படம் எடுக்கப்பட்டுள்ளது. எனே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதே போல கவுதம் தரப்பு வழக்கறிஞர் ’’ ஒப்பந்தம் போடப்பட்டது உண்மைதான். இதற்கான பணத்தை கொடுக்க தயாராக உள்ளோம் . அவர்களுடன் சமரசம் செய்து கொள்கின்றோம் ’’ என கூறினார்.
மனுதாரர் தரப்பில்இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து இதை பதில் மனுவாக தாக்கல் செய்யும் படி கவுதம் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. எனவே நீதிமன்றம் மனுவை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். .
. எனவே திட்டமிட்டபடி படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும்.