ஒரு பொருள் என்ன தான் தரமானதாக இருந்தாலும், சரியான விளம்பரம் இல்லை என்றால் வியாபாரம் குறைவாக தான் இருக்கும். அதற்க்கு தான் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பரத்திற்கு பல லட்சங்களை செலவு செய்கிறார்கள். ஆனால், சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு அதிக பணம் கொடுத்து விளம்பரம் செய்ய முடியாது. ஆனால் இங்கு ஒரு வியாபாரி, செய்திருக்கும் செய்திருக்கும் விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் தேங்காய் விற்பனையாளர் ஒருவர் Zepto, BlinkIit மற்றும் BigBasket போன்றவற்றுக்கு சவால் விடும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் மளிகை பொருள்களை விற்பனை செய்யும் ஆப் எப்படி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளார். ஆம், Zepto, BlinkIit மற்றும் BigBasket போன்ற ஆப்களில் விற்கப்படும் தேங்காயின் விலையை பட்டியலிட்டு, அதனுடன் தான் விற்கும் தேங்காயின் விலையை ஒப்பிட்டுள்ளார். அதன் படி, Zepto, BlinkIit ஆப்களில் தேங்காய் 80 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், BigBasket-ல் தேங்காய் 70 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஆனால் தான் 55 ரூபாய்க்கு மட்டுமே தேங்காயை விற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த பலர், தாங்கள் தேவை இல்லாமல் அதிகம் செலவு செய்வதை உணர்ந்தாலும். மேலும் சிலர், அதிகம் காசு கொடுத்தாலும் பெட்ரோல் செலவு செய்து, குப்பையான ரோட்டில் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் ஆப்களில் வாங்குவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Read more: மீனா காதலித்து கழட்டி விட்ட நடிகர் இவர் தான். இது தான் காரணமாம்…