வேங்கைவயல் விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒரு செல்போன் ஆடியோ உண்மை தான் என்று உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பத்தில் சிபிசிஐடி போலீசார் 3 பேரை சுட்டிக்காட்டி, இந்த சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம் என கூறியுள்ளனர். சிபிசிஐடியால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வேங்கைவயலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஹாசன் முகமது ஜின்னா கூறுகையில், வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதலோ, அரசியல் காழ்புணர்ச்சியோ கிடையாது. இது தனிமனித குற்றம் என விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒரு செல்போன் ஆடியோ உண்மை தான்.
இது தொடர்பாக 389 சாட்சியங்களிடம் விசாரிக்கப்பட்டு, 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 87 டவர் லொகேஷன்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும், 31 பேரிடம் மேற்கொண்ட டிஎன்ஏ முடிவுகளின் அடிப்படையிலும், 3 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
Read More : அடேங்கப்பா..!! பாஜகவின் வங்கிக் கணக்கில் ரூ.7,113 கோடி..!! தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல்..!!