‘GOAT’ படத்தில் அஜித் இருப்பது குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் கோட். இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட்பிரபு யூடியூப் தளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
‘GOAT’ படத்தில் பல சர்ப்ரைஸ் உள்ளதாகவும், அதை பேட்டிகளில் யாரும் வெளிப்படுத்த கூடாது என விஜய் விரும்புவதால் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவை மட்டுமே பேட்டி கொடுக்க சொல்லி விஜய் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘GOAT’ படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சஸ்பென்ஸ் ஒன்றை உடைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
‘GOAT’ படத்தின் ட்ரைய்லரில் ‘சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்’ என விஜய் வசனம் பேசுவார். இதே வசனத்தை ‘மங்காத்தா’ படத்தில் அஜித் பேசியிருப்பார். இதே போன்று ‘GOAT’ படத்திலும் அஜித் வாய்ஸ் அல்லது அஜித் ரெஃபரன்ஸ் அல்லது அஜித்தே கூட வருவார் என சஸ்பென்ஸ் உடைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதேபோல, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் விஜய் ரெஃபரன்ஸ் வரும் என்ற செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Read More : பாலியல் தொல்லை..!! நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் வெடித்த பூகம்பம்..!!