குளிர்கால பருவநிலை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக, இந்த மோசமான குளிர்கால பருவநிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு, ஜுன்ஜுனு மற்றும் சிகார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான குளிர் காரணமாக அந்த பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளை பாதித்துள்ளது. மேலும்., ஃபதேபூரில் குறைந்தபட்ச வெப்பநிலை -1 ° C ஆகவும், சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலை -0.9 ° C ஆகவும், சங்கரியாவில் 2.4 ° C ஆகவும் பதிவாகியுள்ளது.