2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
மத்திய – மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, பயிர்க்கடன், உர மானியம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரும்பு விவசாயிகள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு ரூ.4,100ஆக வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.3,151 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9.50% அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.3,151ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.