அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களுக்கு மட்டுமே தற்போது ஓய்வூதியம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனி அனைத்து குடிமக்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, அமைப்புசாரா தொழில்கள் எனப்படும் கட்டுமான ஊழியர்கள் உள்ளிட்ட தனியார் துறை, டெலிவரி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எந்த பென்ஷன் திட்டமும் கிடையாது.
எனவேதான் அனைத்து தரப்பினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் யுனிவர்சல் பென்ஷன் ஸ்கீம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ஆலோசனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்களும் இந்த பென்ஷன் திட்டம் பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்த புதிய திட்டம் ’புதிய பென்ஷன் திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றகவோ அல்லது அதனுடன் இணைத்தோ இது கொண்டு வரப்படாது. இத்திட்டம் முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை எந்த திட்டத்தின் கீழும் இணையாதவர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதாகும். இந்த திட்டத்திற்கான முன்மொழிவு ஆவண பணிகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
Read More : விஜய் பாணியில் அவரையே வெச்சி செய்த அண்ணாமலை..!! நீங்களே இப்படி சொல்லலாமா ப்ரோ..?