fbpx

செம குட் நியூஸ்..!! இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. இதையடுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6 – 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் சேர 6 – 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருக்க வேண்டும். இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6 – 8ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் கண்காணித்திட மாநில அளவில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களைக் கொண்டு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டம் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் பொருந்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இப்படி இருக்கையில், கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதாகவும், இனி உயர்கல்வி செல்லும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிசம்பர் 30ஆம் தேதி இந்த விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Read More : குழந்தை வேண்டி உயிருள்ள கோழியை விழுங்கி பரிகாரம்..!! மாந்திரீக சடங்கால் நிகழ்ந்த விபரீதம்..!!

English Summary

Chief Minister M. Stalin has also announced that from now on, government-aided schoolgirls pursuing higher education will also be given Rs. 1,000 per month.

Chella

Next Post

”உடனே கடைக்கு புறப்படுங்க”..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Wed Dec 18 , 2024
In Chennai today (December 18), the price of gold jewelry fell by Rs. 120 per sovereign to Rs. 57,120, and one gram of gold fell by Rs. 20 to Rs. 7,135.

You May Like