fbpx

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!… ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

இமயமலை, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாகவும். பொதுமக்கள் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அதேபோன்று, உத்தரகண்டில் ஆக.12, 15, 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மி மீ வரை மழை பெய்யலாம். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு ஐஎம்டி இன்று வரை ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட நிலையில், அதனை தொடர்ந்து மேலும் 2 நாள்களுக்கு தற்போது எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Kokila

Next Post

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய்!… அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

Sun Aug 13 , 2023
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து மத்திய வேளாண் இணை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இந்த பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் […]

You May Like