fbpx

மிக கனமழை..!! தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இனி சிறையில் உள்ள கைதிகளை பார்க்க ஆதார் கட்டாயம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Fri Nov 3 , 2023
சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறைக் கைதிகள் மற்றும் அவர்கள் பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்தாண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்கு தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச், செப்டம்பா் மாதங்களில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதுதொடா்பாக அனைத்து […]

You May Like