தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்திருக்கிறது. மழையின் அளவு போதுமானதாக இல்லை என்றாலும் கூட, கோடை வெயில் குறையும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. மே மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய கோடை மழை, கொஞ்சம் கொஞ்சமாக வடமாவட்டத்தையும் நனைத்தது. இன்று வரை பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்தல், உயிரிழப்புகளை தவிர்த்தல், முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உடனுக்குடன் வழங்குதல், வானிலையை தொடர்ந்து கண்காணித்தல், வெள்ள பாதிப்பு ஏற்பட உள்ள பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் போன்ற அறிவுறுத்தல்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
Read More : வெறும் ரூ.500 முதலீடு..!! லட்சக்கணக்கில் வருமானம்..!! இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?