fbpx

தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை..!! இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது..!!

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிசம்பர் 17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு..!! ஆதரவு, எதிர்ப்பு எத்தனை பேர் தெரியுமா..?

English Summary

The Meteorological Department has stated that there is a possibility of heavy rain in Tamil Nadu today.

Chella

Next Post

”எங்களுக்கு பயமா இருக்கு”..!! அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள்..!! பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பரபரப்பு புகார்..!!

Tue Dec 17 , 2024
Bike taxi drivers have complained that auto drivers are attacking bike taxi drivers to threaten them, and that auto drivers are threatening female bike taxi drivers.

You May Like