தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.