fbpx

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, நீலகிரி, கோவை, விருதுநகர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும் பெய்யக்கூடும்.. நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, தர்மபுரி, திருப்பத்தார்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. .

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ ஆந்துர கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌… எனவே மீனவர்கள் வரும் 5-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

13 வயது சிறுமி.. குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம்; பெற்ற தந்தை செய்த கேவலமான செயல்..!

Wed Aug 3 , 2022
வேலூரில் தந்தையே தனது 13 வயது பெண் குழந்தையை கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சங்கர் (45). இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டதால், தனது 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது அவரது […]
தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமி..!! நடுரோட்டில் இளைஞர் செய்த மோசமான காரியம்..!!

You May Like